பொம்மை வெடித்து 3 குழந்தைகள் பலி! பாகிஸ்தானில் பெருந்துயரம்
kills
pakistan
children
toy bomb blast
By Vanan
பாகிஸ்தானில் பொம்மை வெடிகுண்டு வெடித்ததில் 3 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கே, கைபர் பக்துன்குவா மாகாணத்தில் டேங்க் மாவட்டத்தில் மெஹ்சுத் கெரூனா என்ற பகுதியில் குழந்தைகள் சிலர் தங்களது வீடருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.
இதன்போது, பொம்மை போன்ற பொருள் ஒன்று வீட்டினருகே கிடந்துள்ளது. இதனை அந்தக் குழந்தைகள் எடுத்து விளையாடியுள்ளனர்.
ஆனால், பொம்மை போன்று இருந்தது வெடிகுண்டு எனத் தெரியாமல் குழந்தைகள் விளையாடியுள்ளனர்.
விளையாடும் போது அந்த பொம்மை வெடிகுண்டு திடீரென வெடித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் 3 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
1ம் ஆண்டு நினைவஞ்சலி