பாகிஸ்தானில் இடம்பெற்ற பாரிய தொடருந்து விபத்து - 6 அதிகாரிகள் பணிநீக்கம்!
Pakistan
Accident
By Sathangani
கடந்த 7ஆம் திகதி பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து 275 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இடத்தில் ஹசரா எக்ஸ்பிரஸ் தொடருந்து விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் இதுவரை 34 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹசரா எக்ஸ்பிரஸ் தொடருந்தின் 10 பெட்டிகள் தடம் புரண்டதன் காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஹசரா எக்ஸ்பிரஸ் தொடருந்து விபத்து தொடர்பாக 6 தொடருந்து திணைக்கள அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்ய அந்நாட்டு தொடருந்து திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி