பந்து வீச்சில் கலக்கும் பாகிஸ்தான்: தோல்வியை தழுவுமா பங்களாதேஷ்
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் ஏழாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியானது பாகிஸ்தானின் லாகூர் சர்வதேச விளையாட்டரங்கில் இன்று(06) 2.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.
இதில் நாணயசுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணியின் ஷகிப் அல் ஹசன் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளார்.
10 ஓவரில் 4 விக்கெட்டுகள்

அதன்படி பங்காளதேஷ் முதலில் துடுப்பாட்டத்தை செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக நைம் - ஹசன் மிர்ஷா களமிறங்கினர்.
அப்ரிடி வீசிய முதல் ஓவரை நைம் மெய்டன் செய்தார். அடுத்த ஓவரை நசீம் ஷா வீசினார். இவர் வீசிய முதல் பந்தில் ஹசன் மிர்ஷா ஆட்டமிழந்து வெளியேறினார். இதனையடுத்து நைம் மற்றும் தாஸ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
4 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 26 ஓட்டங்களை எடுத்திருந்தது.
5-வது ஓவரை அப்ரிடி வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் லிட்டன் தாஸ் கீப்பரிடம் பிடி கொடுத்து வெளியேறினார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நைம் 7-வது ஓவரில் ஹரிஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
10-வது ஓவரின் முதல் பந்தில் தௌஹித் ஹிரிடோய் 2 ஒட்டங்களில் ஆட்டமிழந்தார். இதனால் பங்காளதேஷ் அணி 10 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 49 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவுப் 2 விக்கெட்டுகளையும், அப்ரிடி, நசீம் ஷா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.