இந்திய எல்லையை கடந்த பாகிஸ்தானி சுட்டு கொலை: மீண்டும் வெடித்த பதற்றம்
இந்திய (India) எல்லையை கடந்த பாகிஸ்தானைச் (Pakistan) சேர்ந்த நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குஜராத்தின் (Gujarat) பானாஸ்காந்தா மாவட்டத்தில் இந்திய எல்லையை கடந்த பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு சுட்டுகொல்லப்பட்டுள்ளார்.
இது, பஹல்காம் தாக்குதலின் பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற மூன்று நாள் உள்நாட்டு மோதலுக்கு பிறகு நடந்த முதல் துப்பாக்கிச்சூடு சம்பவம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய எல்லை
இது தொடர்பில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சந்தேகப்படத்தக்க நபர் ஒருவர் எல்லை வேலி நோக்கி வந்ததை கண்காணிக்கையில், அவரை நிறுத்த கோரியதற்கு மறுப்பு தெரிவித்ததால் சுட்டுத் தள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தரப்பில் இது தொடர்பில் தெளிவாக எந்த அறிவிப்பும் வரவில்லை எனவும் எல்லை பகுதிக்கு அவர் எவ்வாறு சென்றார் என்பது சந்தேகத்திற்கு உரியது எனவும் அத்தோடு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


யார் அகதி..! : உலகத்தமிழர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய தீர்ப்பு 12 மணி நேரம் முன்
