இஸ்ரேல் படையினரின் சினைப்பர் தாக்குதலில் ஊடகவியலாளர் படுகாயம்
இஸ்ரேல் படையினர் மேற்கொண்ட சினைப்பர் தாக்குதலில் காசாவில் பாலஸ்தீன ஊடகவியலாளர் ஒருவர் காயமடைந்துள்ளதாக அதிகாரபூர்வ பாலஸ்தீன செய்தி நிறுவனமான WAFA தெரிவித்துள்ளது.
இன்று வியாழன் அன்று மத்திய காசா பகுதியில் உள்ள வாடி காசாவிற்கு தெற்கே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
போர் நிறுத்தத்தை மீறிய இஸ்ரேல்
அப்துல் ரஹ்மான் அல்-கஹ்லோட்டின் என்ற ஊடகவியலாளரே காலில் காயமடைந்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகக் கருதப்படுகிறது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நவம்பர் 24 முதல் நான்கு நாள் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. பின்னர் திங்கள்கிழமை இரண்டு நாட்கள் மற்றும் புதன்கிழமை ஒரு நாள் போர் நிறுத்தம் நீடிக்கப்பட்டது.
15,000 பாலஸ்தீனியர்கள் பலி
காசாவில் உள்ள பாலஸ்தீன சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவலில் போர்நிறுத்தம் அறிவிக்கப்படும் வரை,15,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன் 6,150 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உட்பட 36,000 பாலஸ்தீனியர்கள் காயமடைந்ததாக அறிவித்துள்ளது.
Israeli occupation forces launched a military raid on the city of Tulkarm and its refugee camp in the early hours of Thursday.
— The Palestine Chronicle (@PalestineChron) November 30, 2023
FOLLOW OUR LIVE BLOG:https://t.co/VzKXp0Mz4s pic.twitter.com/IBKhihN7gO
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்