பல்லேகம தேரர் மீதான பாலியல் அத்துமீறல் வழக்கு! இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வரும் சிறுமி

Anuradhapura Sri Lanka Police Investigation
By Dharu Jun 26, 2026 12:19 PM GMT
Report

சிறுமி ஒருவரை பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்த பல்லேகம ஹேமரத்ன தேரர் தொடர்பான வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றது.

இந்நிலையில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி தற்போது பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் நீதிமன்றுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை, சட்டமா அதிபர் திணைக்களம் மேற்பார்வையிட்டு வருகிறது. இந்நிலையில், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தங்க வைக்கப்பட்டிருக்கும் இடம் தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டாம் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்லேகம ஹேமரத்ன தேரர் மீதான விசாரணை! விடுக்க்கப்பட்ட கோரிக்கை

பல்லேகம ஹேமரத்ன தேரர் மீதான விசாரணை! விடுக்க்கப்பட்ட கோரிக்கை

காவல்துறை விசாரணை

குறித்த வழக்கு, அனுராதபுர பிரதான நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வழக்கு தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

பல்லேகம தேரர் மீதான பாலியல் அத்துமீறல் வழக்கு! இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வரும் சிறுமி | Pallegama Thero Case Girl Being Secretly Protected

இதனை தொடர்ந்து, அனுராதபுர பிரதம நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன, நிட்டம்புவ தலைமையக காவல்துறை விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து விசாரித்துள்ளார்.

இதன்போது, நிட்டம்புவ தலைமை காவல்துறை பிரதம ஆய்வாளர் பி.எம். அனுர குணவர்தன, இச்சம்பவம் தொடர்பான முதல் டி.என்.ஏ பரிசோதனை அறிக்கை ஏற்கனவே பெறப்பட்டுவிட்டதாகவும், இரண்டாவது டி.என்.ஏ பரிசோதனை அறிக்கை விரைவில் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

விசாரணைகள் தொடர்பாக, சந்தேக நபரான தேரர், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அச்சிறுமியின் தாயார் ஆகியோரின் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள் ஏற்கனவே பெறப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக பிரதம ஆய்வாளர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணைகள் நடத்தப்படும் என்றும், அந்த விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கை அளிக்க ஒரு திகதியை வழங்குமாறும் பிரதம ஆய்வாளர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பல்லேகம தேரரின் மரபணு பரிசோதனை : இரத்த மாதிரியை வழங்குமாறு உத்தரவு

பல்லேகம தேரரின் மரபணு பரிசோதனை : இரத்த மாதிரியை வழங்குமாறு உத்தரவு

சிறப்பு வாதங்கள்

சந்தேக நபரான பல்லேகம ஹேமரத்ன தேரருக்காக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்திரதிஸ்ஸ, இச்சம்பவம் இன்னும் விசாரணையில் இருப்பதால், சிறப்பு வாதங்களை முன்வைக்கப் போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

பல்லேகம தேரர் மீதான பாலியல் அத்துமீறல் வழக்கு! இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வரும் சிறுமி | Pallegama Thero Case Girl Being Secretly Protected

இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியை கண்காணிக்கும் நன்னடத்தை அதிகாரி, அந்த சிறுமி தற்போது உளவியல் ஆலோசனைக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும், நன்னடத்தை துறையின் மேற்பார்வையில் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நன்னடத்தை அதிகாரி, குறித்த சிறுமி உள்ள இடத்தை வெளியிட முயன்றபோது, நீதவான் அதனை வெளிப்படுத்த வேண்டாம் என்று அவருக்கு வலியுறுத்தியுள்ளார்.

பௌத்த வாதத்தின் முன் சரிந்த மார்க்சியம்! தர்ம நீதிமன்றத்தை ஜே.வி.பி. எப்படி எதிர்கொள்ளும்

பௌத்த வாதத்தின் முன் சரிந்த மார்க்சியம்! தர்ம நீதிமன்றத்தை ஜே.வி.பி. எப்படி எதிர்கொள்ளும்

சிறுமி மீதான பாலியல் அத்துமீறல்! ஹேமரத்ன தேரருக்கு விளக்கமறியல்

சிறுமி மீதான பாலியல் அத்துமீறல்! ஹேமரத்ன தேரருக்கு விளக்கமறியல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022