முடங்கியுள்ள நாடு! பாதிக்கப்படும் சீவல் தொழிலாளர்கள்
கிளிநொச்சி மாவட்டத்தில் பனை தென்னை வள அபிவிருத்தி சங்கத்தின் கீழ் உள்ள கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கல்மடு நகர் பகுதியில் பலர் சீவல் தொழிலை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நாளாந்தம் காலையிளும் மாலையிளும் மரத்தில் ஏறி பெறப்படுகின்ற கள்ளினை வீணாக நிலத்தில் ஊற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதை வேறு மாற்று உற்பத்தியும் எம்மால் மேற்கொள்ள முடியாத நிலையும் உள்ளது.
நாளாந்தம் காலையும் மாலையும் சீவப்படும் கள்ளினை என்னசெய்வது என்று தெரியாத நிலையில் மீண்டும் மீண்டும் தொடர்ந்து அத் தொழிலை செய்ய வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.
அப்படி தொடர்ச்சியாக செய்யாவிடில் மீண்டும் அத்தொழிலை செய்யமுடியாத நிலை ஏற்படும் அத்தொடு தொடர்ந்து சீவல் செய்யாவிடில் அந்தமரம் முற்றாக அழிவடையும் நிலையும் வரும் அதன் காரணமாக காலையும் மாலையும் அதனுாடாகப் பெறப்படுகின்ற கள்ளினை கீழே உற்று நிலை ஏற்பட்டுள்ளது.
காரணமாக நாளாந்தம் பெறப்படுகின்ற கல்லினை எமது சங்கத்தின் உடாக விற்பனை செய்யப்பட்டுகின்ற கள்ளின் பணத்தின்மூலம் பெறுகின்ற வருமானத்தைக் கொண்டு தமது வாழ்வாதாரத்தை முன்பு வந்ததாகவும் தற்போது அதற்கு ஒரு வழியும் இன்றி போய் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எமது குடும்பத்தின் நிலை கருதி நமக்கு ஏதேனும் ஒரு நிவாரணத்தை பெற்று தரவேண்டும் என்று சம்பந்தப்பட்ட பட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.




