மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பமான தேர்தல் பணிகள்
மட்டக்களப்பு (Btticaloa) தேர்தல் மாவட்டத்திற்கான அனைத்து தேர்தல் பணிகளும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.பி.எம்.சுபியான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்காக மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மத்திய வாக்கெண்ணும் நிலையத்திலிருந்து 442 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்குப் பெட்டிகள இன்று (13) காலை முதல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா தொகுதியில் 123 வாக்களிப்பு நிலையங்களும், மட்டக்களப்பு தொகுதியில் 197 வாக்களிப்பு நிலையங்களும், பட்டிருப்புத் தொகுதியில் 122 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்களிக்கத் தகுதி
மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் 46 வாக்கெண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் பணிகள் நடைபெறவுள்ளன.
இதில் சாதாரண வாக்கெண்ணுவதற்காக 37 நிலையங்களும், தபால் மூல வாக்கெண்ணுவதற்காக 9 நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக 6750 அரச உத்தியோகத்தர்களும் 1917 காவல்துறையினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் 87 விஷேட கண்காணிப்பு காவல்துறை பிரிவினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடவுள்ளதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.பி.எம்.சுபியான் தெரிவித்துள்ளார்.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 இலட்சத்து 49 ஆயிரத்து 686 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |