நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற அமர்வு

Parliament of Sri Lanka Sri Lanka Parliament Sri Lanka Politician Sri Lanka Government
By Rajitha Jun 04, 2023 05:28 AM GMT
Report

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ தலைமையில் கடந்த 26ஆம் திகதி கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வு வாரத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ள சபை அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானீ ரோஹணதீர தெரிவித்தார்.

இதற்கமைய ஜூன் 7 புதன்கிழமை தவிர ஒவ்வொரு நாளும் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒழுங்குவிதிகள்

நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற அமர்வு | Parliament Gethering From 6Th To 9Th June Srilanka

நாடாளுமன்றம் ஜூன் 6 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை மு.ப 9.30 மணிக்குக் கூடவிருப்பதுடன், மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை சிவில் விமான சேவைச் சட்டத்தின் கீழ் 2303/18 மற்றும் 2304/46 இலக்க வர்த்தமானி அறிவித்தல்களில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள், வணிகக் கப்பற்றொழில் சட்டத்தின் கீழ் 2261/49, 2261/50, 2261/51 இலக்க வர்த்தமானி அறிவித்தல்கள் உள்ளிட்டவற்றில் பிரசுரிக்கப்பட்ட 13 ஒழுங்குவிதிகள், கப்பற்றொழில் முகவர்களுக்கு கப்பற்சரக்கனுப்புநர்க்கு, கலன் செயற்படுத்தாப் பொதுக்காவுநர்க்கு மற்றும் கொள்கலன் செயற்படுத்துநர்க்கு உரிமமளித்தல் சட்டத்தின் கீழ் 2287/24ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணிவரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

ஜூன் 7ஆம் திகதி மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் உட்பட இலங்கையின் கைத்தொழில் துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறவுள்ளது.

ஜூன் 8ஆம் திகதி பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மற்றும் 2021 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழ் தீர்மானம், தாவர, விலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், குடிவருவோர், குடியகல்வோர் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அன்றையதினம் பி.ப 5.00 மணிக்கு பல்வேறு நியதிச்சட்ட நிறுவனங்களின் ஆண்டறிக்கைகள் தொடர்பான ஏழு பிரேரணைகளை விவாதமின்றி நிறைவேற்றுவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

 பிரேரணைகள்

நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற அமர்வு | Parliament Gethering From 6Th To 9Th June Srilanka

அத்துடன், நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் நாடாளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான நாடாளுமன்ற விசேட குழுவை நியமிப்பதற்கான பிரேரணையும் அன்றையதினம் பிரேரிக்கப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஆளும் கட்சியால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை மீதான விவாதம் நடைபெறும்.

ஜூன் 9ஆம் திகதி மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை தனியார் உறுப்பினர் பிரேரணைகள் பிரேரிக்கப்படவுள்ளன.

இதற்கமைய சகல அரச நிறுவனங்களையும் அரசுக்குச் சொந்தமான கட்டடங்களில் நிலையப்படுத்தல் தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ சமிந்த விஜேசிறியின் பிரேரணை, பயிர்களை சேதப்படுத்துகின்ற மந்திகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தல் தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ நாலக பண்டார கோட்டேகொடயின் பிரேரணை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களை வலுவூட்டுதல் தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ கிங்ஸ் நெல்சனின் பிரேரணை மற்றும் சிறுவர்களின் சுகாதாரக் கல்வி தொடர்பான நிகழ்ச்சித்திட்டமொன்றை பாடசாலை மட்டத்தில் பிரபல்யப்படுத்துதல் தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ராஜிகா விக்ரமசிங்கவின் பிரேரணை என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. 

ReeCha
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016