ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் : பொது மக்களின் பணம் வீணடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு
சிறிலங்கா நாடளுமன்றம் இன்று கூடியதன் மூலம் பொது மக்களின் பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபை நடவடிக்கைக்கு சமுகமளிக்காததன் காரணமாக இன்றைய நாடாளுமன்ற அமர்வு நாளை வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையிலேயே, சமூக ஆர்வாலர்கள் குறித்த விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்றைய தினம் காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியிருந்தது.
ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம்
எனினும், நாடாளுமன்றத்தில் உரிய கோரம் இன்மையால் இன்றைய நாளுக்கான சபை நடவடிக்கைகள் நாளைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச அறிவித்தார்.
இந்த நிலையில், குறித்த நடவடிக்கையின் மூலம் பொது மக்களின் பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வாலர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இந்த சட்டமூலங்கள் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிக கவனம் செலுத்தவில்லை என்பதும் இதன் மூலம் உறுதியாகியுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |