அரசுக்கு பின்னடைவு : வற்வரி தொடர்பில் நாடாளுமன்றில் பதற்றம்:சபை நாளை வரை ஒத்திவைப்பு
Parliament of Sri Lanka
Nalin Fernando
By Sumithiran
வற்வரி தொடர்பில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் ஆளும் தரப்பு எம்.பிக்கள் வருகை போதியளவு இல்லாததால் நாளைவரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, சபையில் கோரமில்லை என்பதை சுட்டிக்காட்டினார். இதனையடுத்து கோரமணி ஒலிக்கப்பட்டது.
ஆளும் தரப்பின் பக்கத்தில்
ஐந்து நிமிடங்கள் நிறைவடைந்த நிலையில், ஆளும் தரப்பின் பக்கத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
எழுந்து சென்ற பிரதி சபாநாயகர்
சபையில் கோரம் இன்மையால், நாடாளுமன்றத்தை நாளை திங்கட்கிழமை (11) காலை 9.30 வரையிலும் ஒத்திவைப்பதாககூறி, அக்கிராசனத்தில் இருந்து பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச எழுந்து சென்றுவிட்டார்.
இன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்த போதிலும் ஆளும் தரப்பே இன்றைய அமர்வை கூட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி