அதிரடியாக கலைக்கப்படவுள்ள நாடாளுமன்றம்! கசிந்தது ரகசியத் தகவல்
எதிர்வரும் ஜுலை மாதமளவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு முதலில் பொதுத்தேர்தல் நடத்தப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது.
புலனாய்வு அமைப்புகளின் அறிக்கை மற்றும் உள்ளக கருத்து கணிப்புகளை அடிப்படையாகக்கொண்டே அதிபர் இந்த முடிவை எடுத்துள்ளார் எனவும் தெரியவருகின்றது.
எதிர்வரும் செப்டம்பர் 18 மற்றும் ஒக்டோபர் 18 இற்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும், இதற்காக வரவு - செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
எனினும், அதற்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்தினால் அதற்கான நிதி எவ்வாறு ஒதுக்கப்படும் என கேள்வி எழுப்பப்படுகின்றது, குறைநிரப்புப் பிரேரணையொன்றை நாடாளுமன்றத்தில் முன்வைத்து நிதியை பெறலாம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |