இன்றைய நாடாளுமன்ற அமர்வு - (நேரலை)
இன்றைய (09) நாடாளுமன்ற அமர்வு மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது
மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல வினாக்களுக்கான விடைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை ஒதுக்கீட்டு திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு, பந்தய, சூதாட்ட விதிப்பனவு திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மற்றும் கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
அதன்பின்னர், பி.ப. 5.00 மணிக்கு சிறிலங்கா வரிவிதிப்பு நிறுவகத்தின் கூட்டிணைத்தல், திருத்தச் சட்டமூலம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அதனையடுத்து, பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை எதிர்க் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமாத்திரமல்லாமல் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் விசேட உரை நிகழ இருப்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்
இன்றைய அமர்வு நேரலை