ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கை தொடர்பில் மனம் திறந்தார் பீரிஸ்
ஐக்கிய நாடுகள் கூட்டத்தொடரில் விவாதத்திற்கு எடுக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கை தொடர்பில் கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் கருத்து வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கைக்கும் இலங்கை போரின்போது நடந்த சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர் கூறினார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதை குறிப்பிட்டார்.
மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கை நம் நாட்டின் உள் விவகாரங்கள் குறித்து கவனம் செலுத்தியுள்ளது என்றார்.
மனித உரிமை எல்லைக்கு முற்றிலும் புறம்பான விஷயங்களே இந்த அறிக்கையில் அடங்குகின்றன.
இது இந்த நாட்டின் உள் விவகாரங்களில் நேரடி தலையீடு என்று அமைச்சர் கூறினார்.
இந்த அறிக்கை வெளிநாட்டு அரசியல் கட்சிகளின் தீர்மானத்தை கொண்டிருந்தது. இந்த கதை நம் நாட்டை ஒரு அரசியல் கால்பந்தாக பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.