மகிந்தவுக்கு மக்களால் வைக்கப்பட்டுள்ள புனைபெயர் -வெளிப்படுத்திய ஆளும் தரப்பு எம்.பி
யுத்தம் நிறைவடைந்த பின்னர் நாட்டை விடுவித்த மகிந்த ராஜபக்சவுக்கு(Mahinda Rajapaksa) ‘மஹிந்த ஹோரா’ என்ற புனைபெயர் மக்களால் சூட்டப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பஞ்சரமித பண்டார தென்னகோன்(Pancharamitha Bandara Tennakoon) தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களிடம் இருந்து நல்லதைக் கேட்க ஒருவர் இறக்க வேண்டும் என்றும், உயிருடன் இருக்கும் போது யாரும் நல்லதைக் கேட்டதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலவசக் கல்வியை வழங்கிய கன்னங்கரா மற்றும் திருமதி.சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆகியோருக்கு மக்கள் இதே போன்ற பட்டங்களை வழங்கியுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அந்த வகையில் நாட்டுக்கு அளப்பரிய சேவையாற்றிய பலருக்கு அவர்கள் உயிருடன் இருக்கும் போதே இவ்வாறான பட்டங்கள் வழங்கப்பட்டதாக நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் தெரிவித்தார்.