யேசு பிரான் அவதரித்த பெத்லகேமில் அமைதிக்காக பிரார்த்திக்கும் மக்கள்

Christmas Palestine Israel-Hamas War
By Sathangani Dec 25, 2023 09:23 AM GMT
Sathangani

Sathangani

in உலகம்
Report

இன்று யேசு கிறிஸ்து பிறந்த நாளான டிசம்பர் 25 என்பதால் உலகம் முழுவதும் கிறிஸ்மஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. ஆனால், இவ்வருடம் யேசுநாதர் அவதரித்த தலமாக கருதப்படும் பெத்லகேம் (Bethlehem) நகரில் கொண்டாட்டங்கள் எதுவுமேயில்லை.

கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலின் வடக்கு பகுதி மீது பலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதை அடுத்து இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க வேண்டுமென உறுதியெடுத்து அந்த அமைப்பினரின் மையமான காசா முனை (Gaza Strip) பகுதியில் பெரும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இதுவரை இஸ்ரேலின் தாக்குதலில் 20ஆயிரத்து 424 பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சிறைச்சாலையில் விடுதலையாகிய கைதிகள்

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சிறைச்சாலையில் விடுதலையாகிய கைதிகள்


வெறிச்சோடிக் கிடக்கும் பெத்லகேம்

இதேவேளை இந்தப் போரின் தாக்கம் பலஸ்தீனத்தின் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திலும் பிரதிபலிக்கின்றதை காணக்கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

bethlehem

ஜெருசேலமிற்கு தெற்கே உள்ள பெத்லகேம் நகரில் உள்ள நட்சத்திர விடுதிகளிலும் உணவகங்களிலும் ஆண்டுதோறும் மக்கள் கூட்டம் மிக அதிகமாக காணப்படும். ஆனால், இம்முறை சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகவும் குறைந்துள்ளதனால் வீதிகள் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

பெத்லகேம் நகரில் வசிப்பவர்களின் வருமானம் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பியுள்ளதால் அம்மக்கள் தற்போது பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

செங்கடலில் ஹவுதி படையினர் அட்டூழியம்: இந்திய கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்

செங்கடலில் ஹவுதி படையினர் அட்டூழியம்: இந்திய கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்


சேர்ச் ஒப் த நேட்டிவிட்டி பகுதி 

யேசுநாதர் பிறந்ததாக கருதப்படும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள "சேர்ச் ஒப் த நேட்டிவிட்டி"(Church of the Nativity) பகுதி வழக்கமாக மக்கள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கும். ஆனால், இந்த கிறிஸ்மஸ் தினத்திற்கு குறைந்த அளவிலான மக்களே வந்துள்ளனர்.

church of the nativity

இந்நிலையில் இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடங்கியதிலிருந்தே பெத்லகேம் நகரில் உள்ள தங்கும் விடுதிகளில் சுற்றுலா பயணிகளால் செய்யப்பட்ட  முற்பதிவுகள் ரத்து செய்யப்பட்டன.

அனைத்து விடுதிகளிலும் அறைகள் வெறுமையாக உள்ளதுடன் கிறிஸ்மஸ் மரங்கள், சிலுவைகள், மேரி சிலைகள் உட்பட பல பொருட்கள், வாங்குவதற்கு ஆட்களின்றி கடைகளில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025