கிளிநொச்சியில் வீதியைப் புனரமைக்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்!
Kilinochchi
Sri Lanka
SL Protest
By Sathangani
கிளிநொச்சி பல்லவராஜன்கட்டு, கிராஞ்சி ஊடாக வலைப்பாடு செல்லும் வீதியை புனரமைத்து தருமாறு கோரி கிராஞ்சி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இன்று காலை 10.30 அளவில் கிராஞ்சி அந்தோனியார் ஆலயத்திலிருந்து பேரணியாக கிராஞ்சி பொதுச்சந்தை வரை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த வீதியைப் புனரமைப்பதற்கான பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டாலும் இடையிலே கைவிடப்பட்டிருக்கிறதாக குறிப்பிட்டனர்.
பல வருட காலமாக அபிவிருத்தி இன்றிய நிலையில் போக்குவரத்து செய்வதில் தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி