கோர முகம் காட்டும் வானிலை - வீட்டின் மேல் மாடியில் சிக்கிய மூவர் மீட்பு
தெதுறு ஓயா பெருக்கெடுத்தமையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
விமானப் படையின் ஹெலிக்கொப்டர் மூலம் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மிகக் கனமழையால் பல ஆறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகின்றது.
அதிக மழைவீழ்ச்சி
இந்தநிலையில், மகாவலி கங்கை, தெதுறு ஓயா, மஹ ஓயா, கலா ஓயா, மாணிக்க கங்கை மற்றும் மல்வத்து ஓயா ஆகிய ஆற்றுப்படுகைகளை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்குக் கிடைக்கும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக அந்தப் பகுதிகளுக்கு கடும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மஹவ எல்ல பிரதேசத்தில் தங்களது வீடு வெள்ளத்தால் சூழப்பட்டமையினால் இரண்டு மாடி வீடு ஒன்றின் மேல் தளத்தில் சிக்கியிருந்த அவர்கள் மூவரும், இலங்கை விமானப் படையைச் சேர்ந்த பெல்-212 ரக ஹெலிக்கொப்டர் மூலம் மீட்கப்பட்டனர் என விமானப்படை தெரிவித்துள்ளது.
அவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கை இலங்கை விமானப்படையின் இரத்மலானை தளத்துடன் இணைக்கப்பட்ட மீட்புக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |