நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் இரண்டு நாட்கள் மூடப்படுகின்றன!
srilanka
people
By Vasanth
தமிழ் - சித்திரை புத்தாண்டு காலப் பகுதியினை முன்னிட்டு எதிர்வரும் 13ஆம் மற்றும் 14 ஆம் திகதிகளில் நாட்டின் அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் சுற்றுலா வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கலால் உரிமம் பெற்ற ஹோட்டல்களில் உள்ள மதுபான நிலையங்கள் திறந்திருக்கும்.
அதேபோன்று பெளர்ணமி தினமான ஏப்ரல் 26ஆம் திகதி நாட்டின் அனைத்து மதுபான சாலைகளையும் மூடுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இக் காலகட்டத்தில் மதுபானங்கள், போதைப்பொருள் மற்றும் புகையிலை குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளை வழங்க 1913 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்