மரண கிணறு இடிந்து வீழ்ந்ததில் 8 பேர் காயம்
Sri Lanka Police
Kandy
Accident
By Raghav
கண்டி பகுதியில் உள்ள விளையாட்டரங்கில் அமைக்கப்பட்டிருந்த மரணக் கிணறு இடிந்து வீழுந்ததில் எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு நேற்று (23.5.2024) வியாழன் திவுலபலஸ்ஸ, ரொட்டவெல பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த மரணக் கிணறே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.
இரவு காட்சி ஆரம்பிப்பதற்கு முன்னதாக பயணச் சீட்டு பெற்று மரணக் கிணறு காட்சி முனை வரை சென்ற குழுவொன்று இந்த விபத்தை சந்தித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வைத்தியசாலையில் அனுமதி
விபத்தில் காயமடைந்த 50 வயதுடைய பெண் ஒருவரும் 13, 36, 40, மற்றும் 45 வயதுடைய நான்கு ஆண்களும் கிராதுருகோட் மற்றும் மஹியங்கனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி