பேராதனைப் பல்கலை கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்!
நிலவிய சீரற்ற வானிலை காரணமாகத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது குறித்து அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, அனைத்து கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை (10) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09) முதல் தங்களது விடுதிகளுக்குத் திரும்ப முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு அனர்த்தம்
இதேவேளை மோசமான வானிலை நிலையை கருத்தில் கொண்டு, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்விச் செயற்பாடுகளும் மற்றும் பரீட்சைகளும் மறுஅறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கடந்த 3ஆம் திகதி பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்தது.

அத்துடன் மகாவலி கங்கை பகுதியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தின் "சரசவி மெதுர" விடுதியின் கீழ் தளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உச்சக்கட்ட பதற்றம் : அடுத்தடுத்து சிறைச்சாலைகளில் வெடித்த வன்முறை - இருவர் பலி : நடந்த துப்பாக்கிச் சூடு - நீதியமைச்சரின் அறிவிப்பு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |