வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளில் வீடு கட்ட அனுமதி : அரச தரப்பு அறிவிப்பு
யாழ்ப்பாணம் - வலி. வடக்கு மீள்குடியேற்ற பகுதியில் இராணுவத்தினரால் விவசாய நடவடிக்கைகளுக்கு மட்டும் என விடுவிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளில் வீடுகளை கட்டுவதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள தேசிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஏற்கனவே வலி. வடக்கு மீள்குடியேற்றப் பகுதியில் பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட்ட போதும் இராணுவத்தினரால் விவசாய நடவடிக்கைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
அநுரகுமார திசாநாயக்கவின் உத்தரவு
தற்போது ஜனாதிபதியே அநுரகுமார திசாநாயக்கவின் உத்தரவுக்கு அமைய விடுவிக்கப்பட்டு விவசாய நடவடிக்கைகளுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்ட தனியார் காணிகளில் வீடுகள் தேவையெனின் கட்ட முடியும்.

அரசாங்க வீட்டுத் திட்டம் தேவையானவர்கள் உரிய நடைமுறைகளை பின்பற்றி பிரதேச செயலகத்தின் ஊடாக விண்ணப்பிக்கும் பட்சத்தில் தகுதியானவர்களுக்கு வீட்டுத் திட்டம் கிடைக்கும்“ என மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! ' |