வாகன இறக்குமதிக்கான சுங்க வரி குறைப்பு தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

vehicle imports sri lanka Chathuranga Abeysinghe
By Dharu Aug 27, 2026 06:33 AM GMT
Report

இலங்கையில், டிசம்பர் 31ஆம் திகதிக்குப் பின்னர் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள சுங்க கூடுதல் கட்டணம் (Customs Surcharge) நீக்கம் குறித்து கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க விளக்கமளித்துள்ளார்.

இதன்படி அந்த நேரத்தில் இலங்கையின் வெளிநாட்டு செலாவணி நிலைமை எவ்வாறு உள்ளது என்பதன் அடிப்படையிலேயே கட்டணம் நீக்கம் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் வாகன விலைகள் மற்றும் இறக்குமதி வரிகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சூரிய மின்படலங்களை பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

சூரிய மின்படலங்களை பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

வெளிநாட்டு செலாவணி கையிருப்பு

நாட்டின் வெளிநாட்டு செலாவணி கையிருப்பை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் தற்போதைய முக்கிய முன்னுரிமை எனக் குறிப்பிட்ட அமைச்சர், அதன் பின்னரே இத்தகைய வரி மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என கூறியுள்ளார்.

வாகன இறக்குமதிக்கான சுங்க வரி குறைப்பு தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு | Customs Duty Reduction For Vehicle Imports

மேலும், வெளிநாட்டு செலாவணி கையிருப்பை பாதுகாக்கும் நோக்கில் கட்டுப்படுத்தப்பட்டிருந்த வாகன இறக்குமதி தற்போது மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, அரசாங்கம் ஆரம்பத்தில் சுமார் 1.8 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான வாகன இறக்குமதியை எதிர்பார்த்திருந்த நிலையில், வரிகள் மற்றும் மேலதிக கட்டணங்கள் உள்ளிட்ட மொத்த மதிப்பின் அடிப்படையில் இந்த ஆண்டில் வாகன இறக்குமதி சுமார் 2.1 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடமை நேரங்களில் சமூக வலைத்தளப் பயன்பாடு : தொடருந்து ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கடமை நேரங்களில் சமூக வலைத்தளப் பயன்பாடு : தொடருந்து ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026