யாழில் சீல் வைத்து மூடப்பட்ட உணவகம்: மதிய உணவு வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
யாழ்ப்பாணம் (Jaffna) - திருநெல்வேலி பகுதியில் உள்ள உணவகமொன்று இன்றைய தினம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி பகுதியில் உள்ள ஓர் உணவகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (24.05) மதிய உணவு வாங்கிய ஒருவரின் உணவுப் பொதியில் மட்டைத்தேள் காணப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனிற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.
இதனையடுத்து, சனிக்கிழமை குறித்த உணவகம் திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் இனால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வழக்கு தாக்கல்
இதன்போது, பொது சுகாதார பரிசோதகரால் ஏற்கனவே வழங்கப்பட்ட திருத்த வேலைகள் எவையும் நிவர்த்தி செய்யப்படாமல் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து, நேற்றைய தினம் திங்கட்கிழமை (27) கடை உரிமையாளரிற்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
உணவகத்துக்கு சீல்
வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான், உரிமையாளரிற்கு 45,000 ரூபாய் தண்டம் அறவிட்டதுடன் கடையினை திருத்த வேலைகள் முடிவடையும் வரை சீல்வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகருக்கு கட்டளை வழங்கியுள்ளார்.
இதன் பின்னர் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் குறித்த உணவகம் இன்றைய தினம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |