கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண் - வெளியான காரணம்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பெண் பயணியொருவர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூர் எயார்லைன்ஸ் (Singapore Airlines) விமானமான SK-468 இல் அதிகாலை 12.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கொழும்பு - தலவத்துகொட பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய வர்த்தகர் என தெரிவிக்கப்படுகின்றது.
ஆக்ஸிஜன் வாயு வழங்க நடவடிக்கை
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இலங்கைக்கு 365 மீன்கள் மற்றும் ஆமைகளை விற்பனைக்கு கொண்டு வந்த நபரே விமானப்பயணியே சுங்க பல்லுயிர் பாதுகாப்பு பிரிவு மற்றும் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் தனது நண்பருக்கு இந்த மீன் மற்றும் ஆமைகளை கொண்டு வந்ததாக சுங்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
இந்த விலங்குகளை தனது பயணப்பொதியில் மறைத்து வைத்து கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீண்டும் ஆக்ஸிஜன் வாயுவை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன்போது சுங்க பல்லுயிர் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இவரை கைது செய்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |