கனடாவில் இருந்து யாழ். வந்தவர் உயிரிழப்பு
Cold Fever
Jaffna
Canada
By Thulsi
கனடாவில் (Canada) இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்தவர் நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்தார்.
புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வந்த பரமநாயகம் திவாகர் (வயது 42) அண்மையில் விடுமுறைக்கு யாழ்ப்பாணம் வந்து வட்டுக்கோட்டையில் தங்கியிருந்தார்.
இவருக்கு கடந்த டிசெம்பர் 31 ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டது.
உயிரிழக்கக் காரணம்
தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
நிமோனியா காய்ச்சலே அவர் உயிரிழக்கக் காரணம் என்று மருத்துவர்களின் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
6ம் ஆண்டு நினைவஞ்சலி