ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக மனுத்தாக்கல் : நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றச்சாட்டு!
Roshan Ranasinghe
Sri Lanka Cricket
Sri Lanka
Court of Appeal of Sri Lanka
By Eunice Ruth
சிறிலங்காவின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில், சட்டத்தரணி ஒருவரால் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுதாரரான சட்டத்தரணி டிமிட்ரி ஷிராஸ் அகஸ்டஸ் பீட்ராஞ்செலி, சட்டத்தரணி சுபாஷினி ஜே மூலம் இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார்.
தண்டனை
இந்த குற்றச்சாட்டுக்கு உரிய தண்டனையை ரொஷான் ரணசிங்கவுக்கு வழங்குமாறு மனுதாரர் கோரியுள்ளார்.
இதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியிலிருந்து ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்