தடுப்பு காவலில் இருந்து விடுவிக்க கோரி ரிஷாட் சார்பில் நீதிமன்றம் சென்ற மனு!
Parliament
Court
SriLanka
Rishad Bathiudeen
By Chanakyan
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தடுப்பு காவல் உத்தரவில் இருந்து விடுவிக்குமாறு கோரி உயர்நீதிமன்றில் FR மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ரிஷாட் பதியுதீனின் சட்டத்தரணிகளால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கடந்த தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் 3 மாத தடுப்பு காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்