22வது திருத்தம் : சட்டத்தரணிகளின் கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம்

Parliament of Sri Lanka Law and Order 22nd Amendment
By Sathangani Sep 01, 2026 07:36 AM GMT
Report

புதிய இணைப்பு

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்களை முழு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இன்று (01) பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இம்மனுக்கள் அழைக்கப்பட்டபோதே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

ஜனாதிபதி சட்டத்தரணிகளான சாலிய பீரிஸ், அலி சப்ரி உள்ளிட்ட பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்த போதும், சட்டமா அதிபர் சார்பில் முன்னலையான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, அரசியலமைப்பின் 132(3) உறுப்புரையின்படி நீதிபதிகள் அமர்வின் அமைப்பைத் தீர்மானிக்கும் அதிகாரம் பிரதம நீதியரசருக்கு மட்டுமே உரித்தானது என வாதிட்டார்.

அனைத்துத் தரப்புச் சமர்ப்பணங்களையும் பரிசீலிப்பதற்காக 15 நிமிடங்கள் விசாரணையை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம், பின்னர் மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டது.

மூன்றாம் இணைப்பு

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்களைப் பரிசீலிக்கும் நடவடிக்கைகளை உயர்நீதிமன்றத்தின் 501 ஆம் இலக்க நீதிமன்ற அரங்கிற்கு மாற்றுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று (01) குறித்த மனுக்கள் விசாரணைக்காக 502 ஆம் இலக்க நீதிமன்ற அரங்கில் அழைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு போதிய இடவசதி இன்மையால் 501 ஆம் இலக்க அரங்கிற்கு மாற்றுமாறு ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்தநிலையில் அந்த கோரிக்கையைக் பரிசீலித்த 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு இந்தத் தீர்மானத்தை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு

அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அரசியலமைப்பின் 22வது திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனையை உயர்நீதிமன்றம் ஆரம்பித்துள்ளது.

பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, நீதியரசர்களான அசேல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோரைக் கொண்ட ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமின் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன.

குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி 67 மனுக்களும், நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நீதித்துறை திருத்தச் சட்டமூலத்தை எதிர்த்து 5 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

இலங்கையின் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் இன்று (01) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இன்று காலை 10 மணி முதல் இந்த மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் கடந்த 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, அதற்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்வதற்குச் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருந்தது.

யாழில் கை விலங்குடன் தப்பி ஓடிய கைதி - காவல்துறையினர் வெளியிட்ட தகவல்

யாழில் கை விலங்குடன் தப்பி ஓடிய கைதி - காவல்துறையினர் வெளியிட்ட தகவல்

40க்கும் மேற்பட்ட மனுக்கள் 

நேற்று (31) வரை அதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்த நிலையில், 40க்கும் மேற்பட்ட ஆதரவு மற்றும் எதிர்ப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

22வது திருத்தம் : சட்டத்தரணிகளின் கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம் | Petitions 22Nd Amendment To Be Considered Today

இந்தச் சட்டமூலத்தின் மூலம் நீதிமன்றத்தின் சுயாதீனத்திற்கும் சட்டத்தின் ஆட்சிகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டியும், அரசியலமைப்பு துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகத் தெரிவித்தும், இச்சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது என்பதால் இதனை நிறைவேற்றுவதற்கு மக்கள் தீர்ப்பிற்கு (சர்வஜன வாக்கெடுப்பு) உத்தரவிடுமாறு கோரியும் குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதற்கமைய, குறித்த மனுக்களைப் பரிசீலிப்பதற்காகப் பிரதம நீதியரசரால் 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் பிரதம நீதியரசருக்கு மேலதிகமாக அசேல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய நீதியரசர்கள் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை எதிர்த்து ஒன்றிணைந்துள்ள முக்கிய அமைப்புகள்!

22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை எதிர்த்து ஒன்றிணைந்துள்ள முக்கிய அமைப்புகள்!

துப்பாக்கி வைத்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அறிவிப்பு

துப்பாக்கி வைத்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026