நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்த்தில் குதிக்கும் பொது சுகாதார ஆய்வாளர்கள்!
நாடு தழுவிய ரீதியில் பொது சுகாதார ஆய்வாளர்கள் (PHI) இன்று (21) நோய் விடுப்பு அறிவித்து அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகத்தின் மூத்த சுகாதார மருத்துவ அதிகாரி தன்னிச்சையாக இடமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 19ஆம் திகதி இரவு கூடிய இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் சாமில் முத்துகுடா தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சுக்கு கடிதம்
இதன் காரணமாக, நேற்று (20) முதல் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளிலிருந்தும் பொது சுகாதார ஆய்வாளர்கள் விலகியுள்ளனர்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளருக்கு இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |