உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளுக்கு வந்த தொலைபேசி அழைப்புகள்! நேரடி சாட்சியத்தின் வாக்குமூலம்
சமீபத்தில் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை இலங்கை அரசாங்கம் கண்டுபிடித்துள்ளதாக வெளியான செய்தி பெரும் சர்ச்சை கிளப்பியிருந்தது.
குறித்த விடயத்தை பொதுபாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தெரிவித்தாக நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் வெளியிட்டிருந்தார்.
எனினும், ரவி செனவிரத்ன அவ்வாறு தெரிவிக்கவில்லை என காவல்துறையினரும் அரசாங்க தரப்பினரும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இந்த செய்தி மக்களுக்கு பெரும் ஏமாற்றமாக மாறியுள்ளது.
இதன்படி, பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அரசாங்கம் கண்டுபிடித்துள்ளதாக போலியாக செய்தி வெளியிடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், இந்த விவகாரத்தின் உண்மைத் தன்மை தொடர்பில் ஆராயும் போது, அதில் உள்ள மர்மங்கள் காரணமாக அரசாங்கத்திற்கு அதனை கையாள்வதில் சிக்கல் நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்புலத்தில் உள்ள பலதரப்பட்ட விடயங்களை விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
