நாட்டில் அடுத்த ஆண்டு முதல் நடைமுறையாகிறது மற்றுமொரு கட்டணத் திட்டம்!
Photoshoot
Dehiwala Zoological Garden
By Dharu
அடுத்தாண்டு முதல் மிருகக்காட்சி சாலைகளில் மிருகங்களுடன் புகைப்படம் எடுத்தல் மற்றும் உணவளிக்க தனி கட்டணத்தை அறிமுகப்படுத்த தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
அடுத்தாண்டு முதல் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெஹிவளை, பின்னவல மற்றும் ரிதியகம விலங்கியல் பூங்காக்கள் மற்றும் பின்னவல யானைகள் சரணாலயத்தின் அபிவிருத்திக்காக அடுத்த வருடம் 285 மில்லியன் ரூபாவை செலவிட எதிர்பார்க்கிறது.
செலவுத்தொகை

இந்தத் திட்டங்களுக்குத் தேவையான நிதி, ஒருங்கிணைந்த நிதி மற்றும் விலங்கியல் பூங்கா மேம்பாட்டு நிதி மூலம் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய செலவுத்தொகையை ஈட்டிக்கொள்ளும் நோக்குடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி