செவ்வந்தியுடன் சிக்கிய ஜேகே பாய் உள்ளிட்ட குற்றவாளிகளின் புகைப்படங்கள் வெளியாகின..!
கணேமுல்ல சஞ்சீவ கொலையில் பிரதான குற்றவாளியாக கூறப்படும் இஷாரா செவ்வந்தியுடன் நேபாளத்தில் கைதானவர்களின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
அதன்படி, செவ்வந்தி மற்றும் மற்றொரு பெண் உட்பட நான்கு பேர் அங்கு கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து சுமார் 18 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தபோது நேபாள பாதுகாப்புப் படையினரினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புகைப்படங்கள்
குறித்த கும்பலில் யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு செல்ல செவ்வந்திக்கு உதவிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜே.கே பாய் என்பரின் புகைப்படத்தையும் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
ஜேகே பாய் மற்றும் தக்சி (போலி செவ்வந்தி)
மேலும், அதில் செவ்வந்திக்கு மாற்றாக செயற்பட்ட போலி செவ்வந்தியான சாவகச்சேரியைச் சேர்ந்த தக்சி என்ற தமிழ் பெண்ணும் உள்ளடங்குவார்.
அவர்களில் 'கெஹல்பத்தர பத்மே'வின் நெருங்கிய கூட்டாளியான ஒருவரும் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், குறித்த கைது நடவடிக்கையில், இஷாரா செவ்வந்தி, கம்பஹா பாபா, நுகேகொட பேபி, ஜேகே பாய், போலி செவ்வந்தி(தக்சி), ஜப்னா சுரேஷ் என்ற சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்பஹா பாபா மற்றும் நுகேகொட பேபி
ஜப்னா சுரேஸ்
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
