டேன் பிரியசாத் கொலையுடன் மூடப்படும் பிள்ளையான் விவகாரம் !
ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவியேற்றது முதல், நாட்டில் துப்பாக்கி சூடு மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றவாளிகளை தேடுவது என்பது ஒரு வாடிக்கையான விடயமாக மாறிவிட்டது.
தொடர்ச்சியாக இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை தேடிய அரசு பின்பு அரசியல் கைதுகளின் பின் தனது பார்வையை திருப்பியது.
இதையடுத்து, ஊழல் மோசடி குறித்து தனது பார்வையை திருப்பி ஒரு விடயத்திலும் சரியான தீர்வு தராமல் தொடர்ச்சியாக விசாரணைகள் மற்றும் தேடுதல்கள் என மக்களை ஒரு நிலையான பாதையில் கொண்டு செல்லாமல் திசைதிருப்பி வருவதாகத்தான் செயற்பாடுகள் காணப்படுகின்றது.
இவ்வாறான பிண்ணனியில்தான் அண்மையில் பிள்ளையானின் கைது முக்கியமான விடயமாக காணப்பட்ட நிலையில், தற்போது அந்த விவகாரம் மறைக்கப்படும் விதமாக அரசியல் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் நேற்று (23) சுட்டுகொல்லப்பட்டார்.
இந்தநிலையில், தற்போது அவரின் கொலை சம்பவம் பேசுபொருளாக மாறி இருக்கும் நிலையில், பிள்ளையானை அரசு மறந்து விடும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இவ்வாறு, தொடர் துப்பாக்கி சூடுகள், அரசியல் கைதுகள், அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை, மறைக்கப்படும் உண்மைகள் மற்றும் ஊழல் மோசடிகள் குறித்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திக்கு அப்பால் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
