பிள்ளையான் சிறையில் : நீலிக்கண்ணீர் வடிக்கும் கருணா

Batticaloa Karuna Amman Pillayan S. Viyalendiran Local government Election
By Sumithiran Apr 30, 2025 07:28 PM GMT
Report

பிள்ளையான்(pillayan) தற்போது சிறையில் இருப்பது கொடுமையான விடயமாகும். ஏற்கனவே இல்லாத பிரச்சனையில் நான்கு வருடங்கள் சிறையிலேயே இருந்தவர். அவர் அப்போது நிரபராதி என வெளியேவந்தவர். அவ்வளவு காலத்திற்கும் யார் பதில் சொல்வது. அது போன்றுதான் தற்போதும் அவருக்கு நடைபெற்று இருக்கின்றது. அதற்காக வேண்டி வெளிநாட்டில் இருக்கின்ற ஊதுகுழர்கள் கத்திக்கொண்டு இருப்பார்கள். என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான வினாயகமூர்த்தி முரளிதரன்(கருணா)(karuna) தெரிவித்துள்ளார். 

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பு மாவட்டம் பன்குடாவெளி 14 ஆம் வட்டாரத்திற்கான தேர்தல் பரப்புரை காரியாலயம், வட்டார வேட்பாளர் சின்னத்தம்பி ரவிச்சந்திரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை(29.04.2025) பதுளை வீதி இலுப்படிச்சேனையில் திறந்து வைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைர் நாகலிங்கம் திரவியம், முற்போக்கு தமிழர் கழகத்தின் செயலாளர் ஜோகநாதன் றொஸ்மன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது கருணா தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,


நாம் செய்தவை ஏராளம்

கிழக்கு மாகாணத்தில் முதன் முதலாக மாகாண சபையைக் கட்டி எழுப்பி அதிலே முதல் முதலமைச்சராக பிள்ளையான் பதவி வகித்து அதனூடாக பாரிய அபிவிருத்திகளை செய்திருந்தார். அதன் பின்னர்தான் கல்வி அபிவிருத்தி உள்ளிட்ட அனைத்து அபிவிருத்திகளும் கிழக்கில் இடம்பெற்றன.

பிள்ளையான் சிறையில் : நீலிக்கண்ணீர் வடிக்கும் கருணா | Pillayan In Jail Karuna Tears

  பின்னர் நான் மத்திய அரசாங்கத்தில் இருந்து கொண்டு பல வீட்டுத்திட்டங்களையும், வீதிகள், பாலங்கள், என பல அபிவிருத்திட்டங்களை செய்திருந்தேன். அதுபோல் வியாழேந்திரன் மத்திய அரசாங்கத்தில் இருந்தபோது பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை செய்திருந்தார். இவ்வாறு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை செய்து விட்டுத்தான் நாங்கள் தற்போது இந்த உள்ளூராட்சி மன்றத்தில் நமது பிரதிநிதிகளை களம் இறக்கி இருக்கின்றோம். எனவே மக்கள் தற்போது கிடைத்திருக்கின்ற வாய்ப்பை தவற விடக்கூடாது ஏனெனில் பல பிரச்சனைகள் நம் மத்தியில் காணப்படுகின்றன.

சம்பிக்கவுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றின் அதிரடி உத்தரவு

சம்பிக்கவுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றின் அதிரடி உத்தரவு

  ஒரு நபர் வயல் செய்வதற்காக பல மக்கள் பாவிக்கின்ற குளத்தை உடைக்கின்றார்கள். மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் ஒருவரும் சென்று அதனை பார்வையிடவில்லை. இவ்வாறானவர்கள் நமக்கு எதற்கு. தேர்தல் காலத்தில் மேய்ச்ல்தரைப் பிரச்சினையைத் தீர்த்து வைப்போம் என தெரிவிப்பார்கள் தேர்தலில் வெற்றி பெற்றதும் அந்தப் பக்கமே அவர்கள் போகவில்லை. இவர்களை நம்பி வாக்களித்ததுதான் மீதமாக உள்ளது இதற்காக வேண்டித்தான் நாம் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளோம். இதனை எமது மக்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அதற்கான ஒரு அத்திவாரம் தற்போது போடப்பட்டுள்ளது.

நாம்  தியாகங்களை செய்தவர்கள் 

 மக்கள் இவ்விடயத்தில் விழிப்பாக இருந்து செயல்பட வேண்டும். தவறான பிரசாரங்களை எடுத்து விடுவார்கள் இதனை நம்பி மக்கள் ஏமாந்து விடக்கூடாது. தற்போது கிடைத்திருக்கிறது ஒரு நல்லதொரு வாய்ப்பாகும் இந்த வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் இதனை ஏனையோருக்கும் தெளிவாக்க வேண்டும்.

பிள்ளையான் சிறையில் : நீலிக்கண்ணீர் வடிக்கும் கருணா | Pillayan In Jail Karuna Tears

  இலங்கை அரசாங்கத்தில் ஓர் விதி போன்று ஒன்று உள்ளது அரசாங்கம் மாறி மாறி வருகின்ற போது முன்னைய அரசாங்கத்தில் இருப்பவர்களை பிடித்து கைது செய்வது விதி போன்று உள்ளது. இப்போது இருக்கின்ற அரசாங்கத்தில் இருப்பவர்கள் அடுத்த முறை வருகின்ற அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு அனைவரும் உள்ளே அனுப்பப்படுவார்கள். நானும் உள்ளே இருந்து வந்தவன்தான் இவை அனைத்தும் அரசியல் பழி வாங்கல்கள். இவை எமது மக்களையும் எமது இருப்புக்களையும் ஒருபோதும் பாதிக்கப் போவதில்லை. இதை பற்றி நாம் அலட்டிக் கொள்ள வேண்டிய தேவையும் இல்லை. ஆனால் நாம் எவ்வகையான தியாகங்களை செய்தவர்கள் என்பதை எனது மக்கள் சிந்திக்க வேண்டும்.

சொத்து மோசடியில் சிக்கிய பெண் காவல்துறை அதிகாரி

சொத்து மோசடியில் சிக்கிய பெண் காவல்துறை அதிகாரி

பிள்ளையான் சிறையில் இருப்பது கொடுமையான விடயம்

பிள்ளையான் தற்போது சிறையில் இருப்பது கொடுமையான விடயமாகும். ஏற்கனவே இல்லாத பிரச்சனையில் நான்கு வருடங்கள் சிறையிலேயே இருந்தவர். அவர் அப்போது நிரபராதி என வெளிய வந்தவர். அவ்வளவு காலத்திற்கும் யார் பதில் சொல்வது. அது போன்றுதான் தற்போதும் அவருக்கு நடைபெற்று இருக்கின்றது. அதற்காக வேண்டி வெளிநாட்டில் இருக்கின்ற ஊதுகுழர்கள் கத்திக்கொண்டு இருப்பார்கள்.


   இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பெரும்பான்மையான மக்கள் வாக்களித்து எமது உறுப்பினர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும் அது கிழக்கு மாகாணத்திற்குரிய ஒரு அத்திவாரமாகும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என்பது கிழக்கு மாகாண மக்களுக்காக முதன்முதலாக உருவாக்கப்பட்ட ஒரு கட்சியாகும். ஆக்கட்சியின் சின்னம்தான் படகு சின்னமாகும் அதன் ஊடாக கிழக்கு மாகாணத்தை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் நமது நோக்கம்.

 அம்பாறை மாவட்டத்திலேயே 60 கிராமங்கள் இல்லாமல் போய்விட்டன. மட்டக்களப்பில் தளவாய்க் கிராமமும் இல்லாமல் போய்விட்டது அதற்கு எல்லாம் துணிந்தவன் முன்வர வேண்டும் நாங்கள் துணிந்துதான் நிற்கின்றோம்.

அநுர ஜனாதிபதியானதற்கு பின்னணியில் ரணில் : பகிரங்கப்படுத்தும் எம்.பி

அநுர ஜனாதிபதியானதற்கு பின்னணியில் ரணில் : பகிரங்கப்படுத்தும் எம்.பி

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற ஒன்று இல்லை 

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற ஒன்று இல்லை அவர்களுக்கு தலைவரும் இல்லை யாரும் இல்லை தலைமை போட்டிக்கு வழக்கு வைத்து ஆளுக்கு ஆள் சண்டை பிடிக்கிறார்கள்.

பிள்ளையான் சிறையில் : நீலிக்கண்ணீர் வடிக்கும் கருணா | Pillayan In Jail Karuna Tears

  வடக்கு மக்கள் அவர்களை விரட்டியுள்ளார்கள் அவர்களை, கிழக்கிலும், விரட்டி அடிக்க வேண்டும் அரசாங்கத்திடம் பின் கதவால் சென்று முன் கதவால் அரசாங்கத்தை அவதூறாக பேசுவதாக நடிக்கிறார்கள். அவ்வாறானவர்கள்தான் அவர்கள். அவர்கள் அரசாங்கத்தின் முகவர்களாக இருந்து செயற்பட்டவர்கள் இதனை வடக்கு மக்கள் நன்கு அறிந்துவிட்டார்கள் கிழக்கு மாகாண மக்களும் இதனை உணர்ந்து செயல்பட வேண்டும். என்பதை நான் கூறிக் கொள்கின்றேன் இவைகள் அனைத்தையும் வீசி எறிந்து விட்டு கிராமத்து மக்கள் எமது போராளிகள் எமது வேட்பாளர்களை வெற்றிபெற வைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை : கைது செய்யப்பட்ட அரச அதிகாரிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை : கைது செய்யப்பட்ட அரச அதிகாரிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Gunzenhausen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Neuilly-Plaisance, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Zürich, Switzerland

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கொழும்பு

29 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
மரண அறிவித்தல்

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நட்டாங்கண்டல்

03 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Kempen, Germany

22 Sep, 2025
மரண அறிவித்தல்

சுருவில், London, United Kingdom

26 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

24 Sep, 2025
22ம் ஆண்டு நினைவஞ்சலி

கும்புறுபிட்டி, உவர்மலை

29 Sep, 2003
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Scarborough, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

Chavakacheri, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025