ரணில், சஜித்தை எதிர்த்து சிறிலங்காவில் உருவெடுக்கும் புதிய சக்தி

SLFP Ranil Wickremesinghe Sajith Premadasa Dayasiri Jayasekara
By Vanan Aug 10, 2023 08:20 AM GMT
Report

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்காத புதியதொரு கூட்டணியை அமைக்க திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது ஏனைய அரசியல் கட்சிகளுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெருமவுடன் இன்று கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொது நிலைப்பாடு

ரணில், சஜித்தை எதிர்த்து சிறிலங்காவில் உருவெடுக்கும் புதிய சக்தி | Plan Set Up New Alliance Not Support Ranil Sajith

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலையில், எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டியது அத்தியவசியமாக உள்ளது. நாடாளுமன்றத்தில் ஒரு சில சூழ்நிலைகளில் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டியுள்ளது.

இதற்கான ஒரு பொது கூட்டணியை நாம் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் நாடாளுமன்றில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு சில தீர்மானங்களை எம்மால் இணைந்து மேற்கொள்ள முடியும்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் நாம் கலந்துரையாட வேண்டும். இவை தொடர்பான பொது நிலைப்பாட்டுக்கு நாம் அனைவரும் வர வேண்டும்.

கூட்டணி அமைக்கும் முயற்சி குறித்து நாம் இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடனும் தற்போது பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறோம்.

கம்யூனிஸ்ட் கட்சியுடன் அண்மையில் இது தொடர்பான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த நிலையில், இன்று சுதந்திர மக்கள் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தினோம்.

அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகிய இருவருக்கும் நாம் ஆதரவளிக்க மாட்டோம் என்பது எமது பொது நிலைப்பாடு” - என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025