உலர் வலய பயிர்செய்கைக்காக களமிறக்கப்படும் ட்ரோன்கள்!
உலர் வலயத்தில் எதிர்வரும் பெரும்போக நெல் விவசாயத்திற்காக ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
விதைத்தல் மற்றும் உரம் இடுதல் போன்ற முக்கிய விவசாய நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேனவின் தலைமையில் குருகுலாவ பகுதியில் ட்ரோன் தொழில்நுட்பம் குறித்த விசேட பயிலரங்கு ஒன்று அண்மையில் நடைபெற்றது.
உள்நாட்டு தயாரிப்பு ட்ரோன்கள்
இதன்போது, முழுமையாக உள்நாட்டு கட்டுப்பாட்டு மென்பொருள் (Software) மற்றும் அமைப்புகளைக் கொண்டு, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட விவசாய ட்ரோன் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது.

Image Credit: DJI
அத்துடன், எதிர்வரும் பெரும்போக பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் இந்த தொழில்நுட்பத்தை எவ்வாறு ஒருங்கிணைத்து வெற்றிகரமாகப் பயன்படுத்துவது என்பது குறித்தும் இந்த நிகழ்வில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |