வெளிநாடொன்றில் நடுவானில் திடீரென தீப்பிடித்த விமானம்
United States of America
Plane Crash
World
By Raghav
அமெரிக்காவின் (United States) லொஸ் ஏஞ்சல்ஸில் இருந்து அட்லாண்டா நோக்கிப் பயணித்த விமானத்தின் இயந்திரத்தில், திடீரென தீப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போயிங் 767-400 ரக பயணிகள் விமானத்தின் இயந்திரத்திலேயே நேற்று (19.07.2025) தீப்பற்றியுள்ளது.
தீயணைப்புப் படை
இதன்காரணமாக குறித்த விமானம் மீண்டும் லொஸ் ஏஞ்சல்ஸில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானம் தரையிறங்கியதும் தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
சம்பவத்தில் விமானத்தில் பயணித்த யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்