“ஒரு வாரத்திற்காவது நாட்டை முடக்குங்கள்” விடுக்கப்பட்டது கோரிக்கை
corona
sri lanka
people
By Shalini
ஒரு வாரத்திற்காவது நாட்டை முடக்குமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண குறிப்பிட்டார்.
நாளாந்தம் வைரஸ் தொற்று உறுதியாகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றமையினால் இந்த நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், அரச மற்றும் தனியார் துறைகளின் மாநாடுகள், சேவையாளர்களின் சந்திப்பு என்பன இடம்பெறுவது தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற நிறுவனங்களின் பிரதானிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்