இலங்கைக்கு இந்தியா கொடுத்துள்ள உறுதிமொழி
srilanka
india
fetilizer
By Sumithiran
இந்தியாவின் முழுமையான ஆதரவோடு இலங்கையில் ஒரு கரிம உர மையத்தை உருவாக்க உறுதியளிப்பதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
கரிம உர விவசாயத்தில் கவனம் செலுத்தவுள்ள இலங்கையின் முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்றும் இந்திய உயர் ஸ்தானிகர் தெரிவித்தார்.
இலங்கைக்கு தேவையான பயிற்சி, தொழில்நுட்ப பரிமாற்றம், நிபுணத்துவம் மற்றும் சுற்றுப்பயணங்கள் ஆகியவற்றில் பங்களிப்பு செய்ய விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் ஒருங்கிணைந்த உயிர் உர உற்பத்தி திட்டங்களை உருவாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க உர நிறுவனங்களை உயர் ஸ்தானிகர் கேட்டுக்கொண்டார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி