தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை தேடுகிறது மொட்டு
Sri Lanka Podujana Peramuna
Election
By Sumithiran
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு வருவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
தற்போது உள்ளூராட்சி மன்றங்களில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகளுக்கு மேலதிகமாக புதிய வேட்பாளர்கள், இளைஞர்கள், சமூகத் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கு முன்னுரிமை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும், வேட்பாளர்களின் தகுதிகள் சோதிக்கப்படும் எனவும் பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
வேட்பு மனு நிராகரிப்பு

தற்போது உள்ளூராட்சி மன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கவுன்சிலர்களில் சட்டம் மற்றும் சமூக நெறிமுறைகளுக்கு முரணாக செயற்பட்டவர்கள் யாராவது இருப்பின் சட்ட அடிப்படையில் அவரின் வேட்பு மனுவை நிராகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி மேலும் குறிப்பிட்டுள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி