நீதி அமைச்சர் முன்னிலையில் கதறியழுத சிறைச்சாலை அதிகாரிகள்!

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation
By Shalini Balachandran Jul 08, 2026 06:37 PM GMT
Report

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார முன்னிலையில் சிறைச்சாலை அதிகாரிகள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு தங்களது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த ஐந்து மற்றும் ஆறாம் திகதிகளில் இடம்பெற்ற கலவரத்தில் 7 சிறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 27 பேர் உயிரிழந்திருந்தனர்.

உயிரிழந்த ஏழு சிறைச்சாலை அதிகாரிகளின் பூதவுடல்களுக்கு இன்று (08.07.2026) இறுதி மரியாதை செலுத்துவதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்கு ஹர்ஷன நாணயக்கார சென்றிருந்த போதே அதிகாரிகள் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் பணிபுரியும் இலட்சக்கணக்கான இலங்கையர்கள்...! வெளியான தகவல்

வெளிநாடுகளில் பணிபுரியும் இலட்சக்கணக்கான இலங்கையர்கள்...! வெளியான தகவல்

உயிரிழந்த அதிகாரிகள்

உயிரிழந்த அதிகாரிகளின் வீடுகளுக்குச் சென்ற அமைச்சரிடம் தங்களது குறைகளை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீதி அமைச்சர் முன்னிலையில் கதறியழுத சிறைச்சாலை அதிகாரிகள்! | Negombo Prison Riot Police Officers Cried

இந்த கலவரத்தை ஆரம்பத்திலேயே தடுத்திருக்க முடியும் எனவும் முறையான உத்தரவு கிடைக்காததன் காரணமாகவே இது இவ்வளவு பெரிய அழிவாக மாறியது எனவும் அவர்கள் வலியுருத்தியுள்ளனர்.

மேலும் தெரிவித்த அதிகாரிகள், “நாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை ஐயா, துப்பாக்கிச் சூடு நடத்தவா என்று நாங்கள் அனுமதி கேட்டோம்.

FIFA உலகக்கிண்ணத்தில் ட்ரம்பின் அரசியல் தலையீடு! விசாரணைக்கு தயாராகும் EU

FIFA உலகக்கிண்ணத்தில் ட்ரம்பின் அரசியல் தலையீடு! விசாரணைக்கு தயாராகும் EU

நிலவும் பிரச்சினைகள்

எங்களுக்கு அந்த உத்தரவு வழங்கப்பட்டிருந்தால் இதனைத் தடுத்திருக்கலாம்.

நீதி அமைச்சர் முன்னிலையில் கதறியழுத சிறைச்சாலை அதிகாரிகள்! | Negombo Prison Riot Police Officers Cried

அவசர நிலைமையின் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அதிகாரத்தை எங்களுக்கு வழங்குங்கள்" என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் மனிதர்களைப் போல மிருகத்தனமானவர்களும் இருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டிய அதிகாரிகள், தங்களது பாதுகாப்பு தொடர்பாக நிலவும் பிரச்சினைகள் குறித்தும் அமைச்சருக்கு விளக்கியுள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் படுகாயமடைந்த மற்றொரு சிறை அதிகாரி உயிரிழப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் படுகாயமடைந்த மற்றொரு சிறை அதிகாரி உயிரிழப்பு

முறையான விசாரணை

மேலும், “இதனை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்திருக்கலாம் ஐயா. சுமார் 1500 பேர் வரை வெளியே வந்திருந்தால் ஒட்டுமொத்த மக்களும் அழிந்திருப்பார்கள்.

அந்த அதிகாரிதான் (உயிரிழந்த அதிகாரி) அதனைத் தடுத்துக் காப்பாற்றினார்” எனக் கூறி அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நீதி அமைச்சர் முன்னிலையில் கதறியழுத சிறைச்சாலை அதிகாரிகள்! | Negombo Prison Riot Police Officers Cried

இதன்போது கருத்துத் தெரிவித்த ஹர்ஷன நாணயக்கார, இச்சம்பவம் தொடர்பாக அதிகபட்ச நீதி நிலைநாட்டப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

சிறைச்சாலை அதிகாரிகளின் பயிற்சிகள், பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு குறித்து புதிய கோணத்தில் சிந்தித்துச் செயற்படவுள்ளதாகவும் இது குறித்து முறையான விசாரணை நடத்தி நீதி வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

🛑 YOU MAY LIKE THIS...! 


ஈரானுடனான ஒப்பந்தம் முடிவிற்கு வந்தது : ட்ரம்பின் அறிவிப்பால் மீண்டும் போர் பதற்றம்

ஈரானுடனான ஒப்பந்தம் முடிவிற்கு வந்தது : ட்ரம்பின் அறிவிப்பால் மீண்டும் போர் பதற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026