அம்பாறை மக்களுக்கு காவல்துறையினர் வழங்கியுள்ள அறிவுறுத்தல்

Sri Lanka Police Ampara Sri Lanka Police Investigation
By Shadhu Shanker Oct 30, 2024 02:43 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

அம்பாறை (Ampara)  மாவட்டத்திலுள்ள பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் காவல்துறையினரினால் வழங்கப்பட்டுள்ளன.

அண்மைக் காலமாக பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதால் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நிந்தவூர், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, கல்முனை, சவளக்கடை, காரைதீவு, சாய்ந்தமருது, பெரிய நீலாவணை, உள்ளிட்ட காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக வீரமுனை, மருதமுனை, மண்டூர் , பகுதிகளிலும் அதிகளவான வீடு உடைத்து நகை, பணம் திருடுதல் மற்றும் மோட்டார் சைக்கிள் காணாமல் சென்ற சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக்கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் சுயநலவாதிகள்! குற்றஞ்சாட்டும் கட்சித் தரப்பு

தமிழரசுக்கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் சுயநலவாதிகள்! குற்றஞ்சாட்டும் கட்சித் தரப்பு

சட்டவிரோத சம்பவங்கள்

குறித்த சட்டவிரோத சம்பவங்களில் வீடுகள் உடைத்து திருடும் சம்பவம் இரவு 1:00 மணிக்கும் அதிகாலை 4:30 மணிக்கும் இடையில் இடம்பெற்று வருவதுடன் வீட்டின் ஜன்னல் கிறில் மற்றும் ஓடுகள் பிரிக்கப்பட்டு வீட்டு உரிமையாளர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது இடம் பெறுவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

அம்பாறை மக்களுக்கு காவல்துறையினர் வழங்கியுள்ள அறிவுறுத்தல் | Police Alert Rising Thefts In Ampara District

இது தவிர மோட்டார் சைக்கிள் திருட்டுக்கள் சம காலங்களில் பல்வேறு காவல் நிலைய பகுதிகளிலும் அதிகரித்துள்ளன.

பெரும்பாலும் பொது இடங்களில் தரித்து வைக்கப்பட்ட நிலையிலும் வயல் வேலை காரணமாக வீதி ஓரங்களில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டியில் வைத்து விட்டு செல்லும் பொருட்கள் உள்ளிட்டவைகள் திருடப்பட்டு வருகின்றன.

மேலும் சில காவல்துறை பிரிவுகளில் வைத்தியசாலை, பொதுச்சந்தை, நகரப் பகுதிகளிலும் மோட்டார் சைக்கிள் களவாடப்பட்டுள்ளமை சிசிரிவி காணொளிகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

பொகவந்தலாவையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு! தீவிர விசாரணையில் காவல்துறையினர்

பொகவந்தலாவையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு! தீவிர விசாரணையில் காவல்துறையினர்

முக்கிய அறிவித்தல்

எனவே இரவு நேரத்தில் வீட்டின் மறைவான இடங்களை பரீட்சித்து பெறுமதியான பொருட்களை பொதுமக்கள் பாதுகாப்பதுடன் , வீட்டின் ஜன்னலுக்காக பொருத்தப்படும் கிறிலை உறுதியான வகையில் பொருத்தி கொள்ளுமாறும் , மின்விசிறி பயன்படுத்தும் வீடுகளில் அதிக திருட்டுகள் இடம்பெறுவதனால் அதிக சத்தம் இடும் இவ்வாறான மின் விசிறிகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு பொதுமக்களை காவல்துறையினர் கேட்டுள்ளனர்.

அம்பாறை மக்களுக்கு காவல்துறையினர் வழங்கியுள்ள அறிவுறுத்தல் | Police Alert Rising Thefts In Ampara District

அத்துடன் பகல் நேரத்திலோ, இரவு நேரத்திலோ தேவையற்ற முறையில் சந்தேகத்திற்கிடமாக மாஸ்க் மற்றும் தொப்பி அல்லது தலைக்கவசம் அணிந்து நடமாடுபவர்கள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே சட்டவிரோத செயற்பாடுகள் சம்பந்தமாக அவதானமாக இருப்பதுடன் சந்தேக நபர்கள் தொடர்பாக தகவல் ஏதேனும் தெரிந்தால் அருகில் உள்ள காவல் துறை நிலையங்களுக்கு தெரியப்படுத்தமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

யாழில் கொடூர கொலை : சடலமாக மீட்கப்பட்ட கணவன் மனைவி!

யாழில் கொடூர கொலை : சடலமாக மீட்கப்பட்ட கணவன் மனைவி!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!             
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, மெல்போன், Australia

12 Nov, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, London, United Kingdom, Paris, France

02 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

09 Nov, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025