கொழும்பில் தேடுதல் நடவடிக்கை -13 பேர் கைது
Sri Lanka Police
Colombo
By Kathirpriya
கொழும்பில் குற்றச்செயல்கள் புரிந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 13 பேர் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (16) காலை பொரளை, சஹஸ்புர வீடமைப்புத் தொகுதியில், பொரளை காவல்த் துறை உத்தியோகத்தர்களும் காவல்த் துறை விசேட அதிரடிப்படையினரும் இணைந்து நடத்திய அதிரடி தேடுதல் நடவடிக்கையின் போதே 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்த் துறையின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
போதைப்பொருள் வைத்திருந்தவர்கள் கைது
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் ஹெரோயின் மற்றும் 'ஐஸ்' போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஏற்கனவே பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் என்றும் மேலும் இரு சந்தேக நபர்களும் இதில் அடங்கியிருப்பதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பொரளை காவல்துறையினர் வாக்குமூலங்களை பெற்று வருகின்றனர்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி