தப்பியோடிய சந்தேக நபரை துரத்தி பிடித்த காவல்துறை: விசாரணையில் வெளிவந்த உண்மைகள்
சந்தேகத்திற்கிடமான வீடொன்றை சோதனையிடச் சென்ற போது தப்பியோடிய சந்தேகநபர் ஒருவரை மொரட்டுவ காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
மொரட்டுவை காவல்துறை பிரிவிற்குட்பட்ட லஞ்சபதி, ஜூபிலி வீதியிலுள்ள வீடொன்றில் இன்று (21) மொரட்டுவை காவல்துறை ஊழல் தடுப்புப் பிரிவின் நிலைய கட்டளைத் தளபதிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
காவல்துறையினர் வீட்டின் முன் கதவு வழியாக வீட்டிற்குள் நுழைந்தவுடன், சந்தேக நபர் வீட்டின் பின் கதவிலிருந்து ஒரு பையுடன் தப்பி ஓட முயன்றுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல்
அதன்போது, குறித்த சந்தேகநபரை கைது செய்து சோதனையிட்ட போது, அவரது பையில் 2,500 போதைப்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
30 வயதுடைய தம்மிக்க பிரியங்கர என அழைக்கப்படும் 'லக்ஷபதி தம்ம' என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
பணத்தை வங்கிக் கணக்கில் வைப்பிலிட்ட பின்னர், போதைப்பொருள் தேவைப்படுபவர்கள் போதைப்பொருளை அவர்கள் சொல்லும் இடத்தில் விட்டுச் செல்வதாகவும் சந்தேக நபர் கூறியுள்ளார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, இந்த மாத்திரைகள் பாடசாலை தொடர்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அதிகமாக போதைக்கு அடிமையானவர்கள் இந்த மாத்திரைகளை அதிகம் பயன்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |