விடுதிக்கு வந்த இளம் பெண் கடத்தல்: தென்னிலங்கையில் பரபரப்பு
Sri Lanka Police
Sri Lanka
Crime
By pavan
ஹொரண பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றிற்குள் புகுந்த சிலர், அங்கு உணவருந்திக் கொண்டிருந்த பெண் ஒருவரை பலவந்தமாக கடத்திச் சென்றுள்ளனர்.
பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
எனினும், கடத்தல் சம்பவம் தொடர்பில் விடுதி ஊழியர்கள் காவல்துறை அவசர இலக்கத்தின் ஊடாக காவல்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.
கடத்தல்காரர்கள் கைது
அதற்கமைய, உடனடியாக செயற்பட்ட ஹொரணை காவல்துறை அதிகாரிகள், கடத்தப்பட்ட பெண்ணை சுமார் 3 மணித்தியாலங்களில் கண்டுபிடித்துள்ளனர்.

அத்துடன், கடத்தலுக்கு வந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். பண்டாரகம, அங்குருவத்தோட்ட வீதியில் லெனவர உயன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்