திறைசேரி இணையவழி மோசடி தொடர்பிலான விசாரணை! COPF குழுவின் நடவடிக்கை
திறைசேரியில் இடம்பெற்ற இணையவழி மோசடி தொடர்பாக நிதி அமைச்சின் செயலாளரைக் குழுவின் முன் முன்னிலையாக அழைக்க உள்ளதாக பொது நிதிக் குழுவின் (COPF) தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் 2.5 மில்லியன் ரூபாய் மதிப்பிலான திறைசேரி மோசடி குறித்தே இந்த விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதன்படி இன்று குறித்த குழு கூடுவதாகவும், அச்சபையில் நிதி அமைச்சகச் செயலாளரைக் குழுவின் முன் முன்னிலையாக அழைப்பதற்கான பரிந்துரையை முன்வைக்கத் தாம் உத்தேசித்துள்ளதாகவும் ஹர்ஷா டி சில்வா தெரிவித்துள்ளார்.
COPF குழு
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
“நான் இன்று COPF குழு உறுப்பினர்களை வரவழைத்துள்ளேன். திறைசேரி மோசடி சம்பவம் தொடர்பாக நிதி அமைச்சகச் செயலாளரை வரவழைக்க வேண்டும் என்பது என் கருத்து.

அவர் நாடாளுமன்றத்திற்கு விளக்கமளிப்பது அவசியம். இது அரசியலமைப்பின் கீழ் உள்ள ஒரு நாடாளுமன்ற அதிகாரம்.
நிதி அமைச்சக செயலாளர் COPF குழுவின் முன் முன்னிலையாகாமல் இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை.
மேலும், நிதி அமைச்சகச் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை COPF குழுவின் முன் கூடிய விரைவில் வரவழைப்பது குறித்து இன்று குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடி ஒருமித்த கருத்தை எட்ட நான் எண்ணியுள்ளேன்.
இக்குழுவில் உள்ள அரசாங்க உறுப்பினர்களுக்கு இந்த முன்மொழிவை நிராகரிக்க எந்தக் காரணமும் இல்லாததால், அவர்கள் இதற்கு ஒப்புக்கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்," என்று கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |