வாள்களுடன் நகைக்கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள்! பொலிஸார் வெளியிட்ட தகவல்
srilanka
police
trincomalee
By Vasanth
திருகோணமலை என்.சீ வீதியிலுள்ள நகைக்கடையொன்றில் நகை மற்றும் பணம் திருடப்பட்டுள்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்றிரவு 7. 15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், திருகோணமலை என்.சீ.வீதியில் அமைந்துள்ள நகைக்கடைக்கு வாள்களுடன் வந்த குழுவினர் உட்சென்று பயமுறுத்தி நகை மற்றும் பணத்தினை கொள்ளையிட்டு கடல் மார்க்கமாக படகில் ஏறிச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது
.
குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி