காவல்துறையினர் குறித்து முறைப்பாடளிக்க புதிய முறைமை அறிமுகம்!

Sri Lanka Police Sri Lankan Peoples Inspector General of Police
By Sathangani Jun 17, 2026 04:29 AM GMT
Report

இலங்கை காவல்துறையினரினால் வழங்கப்படும் சேவைகள் குறித்த பொதுமக்களின் கருத்துக்கள், முறைப்பாடுகள், பாராட்டுக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்காக புதிய QR குறியீட்டு  முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் சேவைகள் குறித்தும் பொதுமக்கள் தமது கருத்துக்களை நேரடியாக வழங்குவதற்காக “Sri Lanka Police Community Feedback Portal” என்ற பெயரில் இணையவழி டிஜிட்டல் தளம் ஒன்று செயற்படுத்தப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் குடிமக்கள் தங்களின் கருத்துக்கள், முறைப்பாடுகள், பாராட்டுக்கள் அல்லது ஆலோசனைகளை எளிதாகச் சமர்ப்பிக்க முடியும் எனவும், அந்தத் தகவல்களைப் பகுப்பாய்வு செய்து மக்களை மையமாகக் கொண்ட, மிகவும் திறமையான சேவையை வழங்குவதே இதன் நோக்கமாகும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ் போதனாவில் இளம் பெண்ணை அவமானப்படுத்திய வைத்திய நிபுணர்! காவல்நிலையத்தில் முறைப்பாடு

யாழ் போதனாவில் இளம் பெண்ணை அவமானப்படுத்திய வைத்திய நிபுணர்! காவல்நிலையத்தில் முறைப்பாடு

அதிகாரபூர்வ இணையத்தளம்

இந்த QR குறியீட்டைப் பயன்படுத்தும் போது, பொதுமக்கள் கருத்து, முறைப்பாடு, பாராட்டு அல்லது ஆலோசனை ஆகியவற்றில் தங்களுக்குத் தேவையான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கலாம். தேவைப்பட்டால் தங்களின் தனிப்பட்ட விபரங்களையும் இதில் உள்ளடக்க முடியும்.

காவல்துறையினர் குறித்து முறைப்பாடளிக்க புதிய முறைமை அறிமுகம்! | Police Launch Qr Code Based Community Feedback

அத்துடன்,  நிலையத்திற்கு வந்ததற்கான காரணம், சம்பவம் அல்லது கருத்து குறித்த விபரங்களையும் இந்த அமைப்பில் உள்ளீடு செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இது தவிர, இலங்கை காவல்துறையின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் உள்ள E-Services பகுதிக்குச் சென்று, அதன் மூலமாகவும் பொதுமக்கள் இந்த 'Community Feedback Portal' தளத்தை அணுகித் தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்ய முடியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகும் யோஷித ராஜபக்ச

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகும் யோஷித ராஜபக்ச

காவல்துறை மா அதிபர் அறிவுறுத்தல்

அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் எளிதாக அணுகக்கூடிய இடங்களான வரவேற்புப் பிரிவுகள் மற்றும் முறைப்பாட்டுப் பிரிவுகளுக்கு அருகில் இந்த QR குறியீட்டுப் பலகைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

காவல்துறையினர் குறித்து முறைப்பாடளிக்க புதிய முறைமை அறிமுகம்! | Police Launch Qr Code Based Community Feedback

இந்தச் சேவை குறித்து காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்துமாறும், தேவையான சந்தர்ப்பங்களில் இந்த வசதியைப் பயன்படுத்துவதற்கு அவர்களுக்கு வழிகாட்டுமாறும் காவல்துறை மா அதிபரினால் அனைத்து சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் காவல் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் (OIC) அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மட்டக்களப்பில் அடித்து நொறுக்கப்பட்ட வயோதிபரின் வீடு: தப்பியோடிய சந்தேகநபர்கள்!

மட்டக்களப்பில் அடித்து நொறுக்கப்பட்ட வயோதிபரின் வீடு: தப்பியோடிய சந்தேகநபர்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


Gallery
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026