யாழில் சிறையிலிருந்து வந்தவரின் அடாவடித்தனம்: இருவர் கைது
யாழில் (Jaffna) தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வட்டுக்கோட்டை காவல் பிரிவிற்குட்பட்ட முதலிகோவில் பகுதியில் குறித்த சம்பவம் நேற்று (07) இடம்பெற்றுள்ளது.
சிறையில் இருந்து வெளியே வந்தவர் தனது சகோதரனுடன் இணைந்தே குறித்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாளுடன் கைது
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தாக்குதல் மேற்கொண்ட இருவரில் ஒரு நபர், வாளுடன் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், ஐந்தாம் திகதி அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் சகோதரனுடன் இணைந்து மீண்டும் ஒரு வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
கூரிய ஆயுதம்
நீண்ட காலமாக இருந்துவந்த காணி தகராறு காரணமாகவே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கூரிய ஆயுதத்தால் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நபர் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், தாக்குதல் நடத்திய இருவரையும் வட்டுக்கோட்டை காவல்துறையினர் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
